உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை இந்த கோடைவிடுமுறையில் கொடுங்கள்!
 
பாரத பண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் பண்பும் திறனும் அறிவும் மேம்பட விவேகானந்த கேந்திரம் - இயற்கை வள மேலாண்மை செயல்திட்ட அமைப்பு (VK-NARDEP) நடத்தும் முகாம் இது. இப்பயிற்சியில் வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவும் திறனும் உணர்வும் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இம்முகாமில் பங்கேற்று பலன் பெற மாணவச்செல்வங்களை அழைக்கிறோம்.
 
பயிற்சி விபரங்கள்

நாள்: மே 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை : 6 நாட்கள்
இடம்: தொழில்நுட்ப மையம் (Technology Resource Center), விவேகானந்த கேந்திரம் - நார்டெப், கன்னியாகுமரி
மாணவர் தகுதி: 8-12 ஆம் வகுப்பு வரை (ஆண்-பெண் இருபாலரும்)
பயிற்று மொழி: தமிழ்
பயிற்றுப்பாடங்கள்: நிகழ்ச்சி தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை
1. உடல்: சூரியநமஸ்காரம், யோகாசனம்
2. பிராணன்: சுவாசப்பயிற்சி, பிராணயாமம்
3. மனம்: தியானம், மனத்திறனை வளர்க்கும் யோகா
4. புத்தி: வகுப்புக்கள், கலந்துரையாடல்கள்
5. ஆன்மா: பாடல்கள், மகிழ்ச்சி அரங்கம், கர்மயோகம்

சுற்றுலா: சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சிகளை பார்த்தல், விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். கிராமோதயா: நீடித்த வளத்துக்கான தொழில்நுட்ப கண்காட்சி.
 
கட்டணம்: தங்குமிடம், உணவு, பயிற்சி ஆகியவை அனைத்துக்குமாக ஒரு மாணவருக்கு ரூ 600/- பயிற்சி கட்டணத்தை "செயலாளர் - விவேகானந்த கேந்திரம்-நார்டெப், கன்னியாகுமரி" எனும் முகவரிக்கு டிடி அல்லது மணியார்டராக அனுப்பவும். எங்கள் வங்கியின் முகவரி பாரத ஸ்டேட் வங்கி விவேகானந்தபுரம் கிளை கன்னியாகுமரி.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்பு: வே.சரஸ்வதி கை-பேசி: 9486760714